search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி கைது"

    • எருக்கஞ்சேரி மெயின் ரோடு சர்மா நகர் பூங்கா அருகே அரவிந்தன் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
    • அரவிந்தனிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி பகுதியில் கத்தியை வைத்துக் கொண்டு ரவுடி ஒருவன் டிக் டாக் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து உதவி கமிஷனர் தமிழ்வாணன், எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் ஆகியோர் அந்த ரவுடி யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில் வியாசர்பாடி புதுநகர் ஏ பிளாக் பகுதியைச் சேர்ந்த 20 வயதே ஆன ரவுடி அரவிந்தன் கத்தியை வைத்து மிரட்டி வீடியோ வெளியிட்டது தெரிய வந்தது. சமூக வலைதளங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணத்தில் சிறுவன் ஒருவனை அருகில் வைத்துக் கொண்டு அரவிந்தன் கத்தியை காட்டி மிரட்டி டிக் டாக் செய்து வீடியோ வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவனை தேடி வந்தனர். இந்த நிலையில் எருக்கஞ்சேரி மெயின் ரோடு சர்மா நகர் பூங்கா அருகே அரவிந்தன் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அரவிந்தனை கைது செய்தனர்

    அரவிந்தனிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. அவன் மீது சில குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த எம்.கே.பி. நகர் போலீசார் அரவிந்தனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது ரவுடிகள் இது போன்ற செயலில் ஈடுபடுவது சட்ட விரோதமாகும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கத்தியை காட்டி மிரட்டி துணிகரம்
    • ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் பாகாயத்தை சேர்ந்தவர் மணி. இவர் நேற்று இரவு பாகாயம் பஸ் நிறுத்தம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிம றித்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500-யை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

    இது குறித்து மணி பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து வழிப்ப றியில் ஈடுபட்ட வேலூர் ஓல்டு டவுன் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பிரபல ரவுடி உதயா (எ)உதயகுமார்(40) என்பவரை கைது செய்தனர் . மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வழிப்பறி சம்பவத்தில் ரவுடிகள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
    • 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சென்னை ராயபுரத்தில் முகமது தமீம் என்பவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 பேர் கொண்ட கும்பல் ரூ 8 லட்சம் பணத்தை வழிப்பறி செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வழிப்பறி சம்பவத்தில் ரவுடிகள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக கொடுங்கையூரை சேர்ந்த ரவுடி வெங்கடேஷ் மற்றும் கொருக்குபேட்டையை சேர்ந்த கருணா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • அன்பரசனை பிரபல ரவுடி அய்யனார் என்கின்ற தாடி அய்யனார் தரப்பினர் கடத்திச் சென்று கடந்த மே மாதம் கொலை செய்து புதைத்தனர்.
    • ரெட்டிச்சாவடி போலீசார் அய்யனார் என்கின்ற தாடி அய்யனார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அய்யனாரை கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி புதுக்கடையை சேர்ந்தவர் சேகர் (வயது 51). இவரது தம்பி மகன் அன்பரசனை புதுச்சேரி மாநிலம் மடுகரையை சேர்ந்த பிரபல ரவுடி அய்யனார் என்கின்ற தாடி அய்யனார் தரப்பினர் கடத்திச் சென்று கடந்த மே மாதம் கொலை செய்து புதைத்தனர்.

    இந்த கொலை வழக்கின் விசாரணைக்கு யாரும் சாட்சி சொல்ல வரக்கூடாது என்பதற்காக கொலை செய்யப்பட்ட அன்பரசனின் உறவினர் சேகர் என்பவரை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்து கத்தியை கழுத்தில் வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் அய்யனார் என்கின்ற தாடி அய்யனார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அய்யனாரை அதிரடியாக கைது செய்தனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் டோல்சன் மற்றும் 4 போலீசார் விஷ்ணுலாலை பிடிப்பதற்காக காந்திபுரம் வந்தனர்.
    • விஷ்ணுலால் மீது கேரள மாநிலத்தில் 15 வழக்குகள் இருப்பதாக தெரிகிறது.

    பீளமேடு,

    கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள அம்பாளப்புழாவை சேர்ந்தவர் டோல்சன் (வயது43).

    இவர் அம்பலப்புழா போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அம்பலபுழா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சில நாட்களுக்கு முன்பு விஷ்ணுலால் ( 29) என்பவர் புகுந்து தாக்குதல் நடத்தி தகராறு செய்தார்.

    மேலும் ஓட்டலில் இருந்த பொருட்களை நாசம் செய்து சூறையாடினார். இது குறித்து அம்பாலப்புழா போலீசார் வழக்குபதிவு செய்து விஷ்ணுலாலை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் டோல்சன் மற்றும் 4 போலீசார் விஷ்ணுலாலை பிடிப்பதற்காக காந்திபுரம் வந்தனர்.

    போலீசார் வருவதை அறிந்த விஷ்ணுலால் அங்கிருந்து தப்பினார். இதையடுத்து போலீசார் அவரை அவரது செல்போன் டவர் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருப்பதை அறிந்த கேரள போலீசார் அங்கு சென்றனர்.

    கதவைத் தட்டி அவரை அழைத்த போது அவர் கதவை திறக்க மறுத்து விட்டார். போலீசார் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

    அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணுலால் அறையில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் டோல்சன் மற்றும் இன்னொரு போலீஸ்காரரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றார்.

    இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் டோல்சன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை பீளமேடு போலீசார் கேரளா போலீசாரிடம் ஒப்படைத்தனர். விஷ்ணுலால் மீது கேரள மாநிலத்தில் 15 வழக்குகள் இருப்பதாக தெரிகிறது. பிரபல ரவுடியான இவர் கோவையில் தன்னை பிடிக்க வந்த போலீசாரை தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விருதுநகர் வாலிபர் கொலையில் ரவுடி கைது செய்யப்பட்டார்.
    • 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    விருதுநகர்

    விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ராம லட்சுமி. இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 17). டிரம்ஸ் இசைக்கலைஞரான இவர் மதுரை யில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்கான கூலி வாங்குவதில் முத்துப் பாண்டிக்கும், அதே பகுதியை சேர்ந்த அஜித்குமா ருக்கும் பிரச்சினை ஏற்பட் டது.

    இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் 2 பேரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து அஜித்குமார், முத்துப்பா ண்டியை கொலை செய்ய திட்டமிட்ட தாக தெரிகிறது.

    இதற்காக சம்பவத்தன்று இரவு முத்துப்பாண்டியை வீட்டில் இருந்து வெளியே அஜித்குமார் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின் முத்துப்பாண்டி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதற்கிடையில் அங்கு உள்ள ஜக்கம்மாள் கோவில் பின்புறம் முத்துப்பாண்டி காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தியதில், அஜித்கு மார், அவரது நண்பர்கள் செல்வம் என்ற விஜய், தனுஷ் உள்பட 4 பேர் முத்துப்பா ண்டியை கொலை செய்தது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இதற்கிடையில் அதே பகுதியில் பதுங்கி இருந்த அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது விருதுநகர் போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்கு கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக கத்தியுடன் சுற்றிய வாலிபரை மடக்கி பிடித்தனர்.
    • சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரவுடியான முரளி என்கிற பாம் முரளி என்பது தெரிந்தது.

    தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக புது வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக கத்தியுடன் சுற்றிய வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    அப்போது அவருடன் வந்த மற்றொரு வாலிபர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட வாலிபர் புது வண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரவுடியான முரளி என்கிற பாம் முரளி (22) என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து கத்தி, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • சொகுசு பங்களா கட்டி வரும் நபர் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி என்பது தெரியவந்தது.
    • வெள்ளை ரவியின் கூட்டாளியாகவும், வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி சுரேசின் வலது கையாக செயல்பட்டு வந்துள்ளார்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே கொடுவாய் பகுதியில் உள்ள ஸ்ரீராம் நகரில் ஒருவர் சொகுசு பங்களா கட்டி வந்தார்.ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில் தனியாக வீடு கட்டி வந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து ஊதியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு சகல வசதிகளுடன் பிரம்மாண்டமாக வீடு ஒன்று கட்டப்பட்டு வந்தது. வீட்டை சுற்றி காம்பவுண்டு சுவர் அமைக்கப்பட்டு, 90 சதவீதம் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு இருந்தது.

    அந்த வீட்டை கட்டுபவர் யார் என்று பணியில் ஈடுபட்டு இருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சொகுசு பங்களா கட்டி வரும் நபர் சென்னை வியாசர்பாடி கரிமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஜனா என்ற ஜனார்த்தனன் (வயது 40) என்பது தெரியவந்தது.

    அவர் மீது சென்னை கொடுங்கையூர், எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10 கொலை வழக்குகள் மற்றும் 15 கொலை முயற்சி வழக்குகள், திருட்டு வழக்குகள் என 35-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது.

    ஒரு வழக்கில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த ஜனா அதன்பிறகு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடினர். தனிப்படை அமைத்தும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் அவர் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கொடுவாய் பகுதியில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்ததுடன், கொள்ளையடித்த பணத்தில் ரூ.1கோடிக்கு சொகுசு பங்களா கட்டி வந்துள்ளார்.

    இதையடுத்து ஜனாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் இது குறித்து சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சென்னை போலீசார் காங்கயம் வந்து ஜனாவை அழைத்து சென்றனர்.

    கைது செய்யப்பட்ட ஜனா, போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி வெள்ளை ரவியின் கூட்டாளியாகவும், வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி சூச்சி சுரேசின் வலது கையாகவும் செயல்பட்டு வந்துள்ளார். தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.

    • நாட்ராம்பாளையத்தில் 2 கொலை வழக்குகள் உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி சாலையில் வசித்து வருபவர் முருகன் (வயது 54). தங்கும் விடுதி உரிமையாளர். கடந்த 26-ந் தேதி இரவு இவர் தங்கும் விடுதி முன்பு இருந்த போது அங்கு வந்த ஒருவர் முருகனுடன் தகராறு செய்தார். இது குறித்து கேட்ட போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது தொடர்பாக முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் முருகனை மிரட்டியவர் பெயர் வெள்ளைசாமி (வயது 41), ஊத்தங்கரை பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான வெள்ளைசாமி பிரபல ரவுடி ஆவார். ஊத்தங்கரை மற்றும் நாட்ராம்பாளையத்தில் 2 கொலை வழக்குகள் உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள அவர் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வ.உ.சி. நகர் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பை சேர்ந்தவர் பூபாலன்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பூபாலனின் உறவினர் ஒருவரது கடையில் பாட்டிலை உடைத்து சசிகுமார் ரகளையில் ஈடுபட்டு உள்ளார்.

    சென்னை:

    புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகர் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பை சேர்ந்தவர் பூபாலன். கண்டெய்னர் லாரி டிரைவர். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்தி வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ரவுடியான சானா என்கிற அப்பு சசிகுமார் என்பவர் அந்த மோட்டார் சைக்கிளை மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்தார்.

    இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பூபாலனின் உறவினர் ஒருவரது கடையில் பாட்டிலை உடைத்து சசிகுமார் ரகளையில் ஈடுபட்டு உள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக பூபாலனின் மோட்டார் சைக்கிளை சசிக்குமார் தீவைத்து எரித்ததாக தெரிகிறது. பெண் விவகாரம் தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • பொதுமக்களை அச்சுறுத்தி ஆபாச வார்த்தைகளால் பொது இடத்தில் நின்று கொண்டு ஒருவர் பேசிவந்தார்.
    • அவர் இதனை மீறியும் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தவே அந்த நபரை கைது செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவில் தெருவில் பொதுமக்களை அச்சுறுத்தி ஆபாச வார்த்தைகளால் பொது இடத்தில் நின்று கொண்டு ஒருவர் பேசிவந்தார். தகவல் அறிந்து சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்தில் இருந்த நபருக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்..

    அவர் இதனை மீறியும் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தவே அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அதே பகுதியில் உள்ள நடராஜன் (வயது 42) என்பது தெரியவந்தது. இதனையடுத்து 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • அதிக் அகமது 5 உயர்ரக நாய்களை உத்தரபிரதேசத்தில் சாக்கியா பகுதியில் உள்ள தனது வீட்டில் வளர்த்து வந்தார்.
    • மற்ற 4 நாய்களும் உணவு கிடைக்காமல் மோசமான நிலையில் இருந்து வருகிறது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் (மேற்கு) பகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ராஜூபால். இவர் பதவி ஏற்ற ஒரு மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீஸ் விசாரணையில் தேர்தலில் அவரிடம் தோல்வி அடைந்த அஸ்ரப் என்பவரின் தூண்டுதலின் பேரில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அஸ்ரப்பின் அண்ணனும், பிரபல தாதாவும், அரசியல்வாதியுமான அதிக்அகமது கைது செய்யப்பட்டார். அவர் தற்போது குஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அதிக் அகமது 5 உயர்ரக நாய்களை உத்தரபிரதேசத்தில் சாக்கியா பகுதியில் உள்ள தனது வீட்டில் வளர்த்து வந்தார். அதில் ஒரு நாய் பல நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் வாடியுள்ளது. இந்நிலையில் பசி மற்றும் தாகத்தால் அந்த நாய் இறந்தது. இதே போல மற்ற 4 நாய்களும் உணவு கிடைக்காமல் மோசமான நிலையில் இருந்து வருகிறது.

    ×